Saturday 12 November 2011

தமிழர் நாகரிகம்


தமிழர் நாகரிகம்

காவிரி, தென்பெண்ணை, பாலாறுபவானிஅமராவதிவைகைதாமிரபரணி, பொருணை மற்றும் கடல் கொண்ட பஃறுளி ஆற்றுச் சமவெளிகளான மருத நிலத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் “நெல் நாகரிகம்” எனப்படும். இந்த நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழர் மள்ளர் எனப்பட்டனர். இந்த நெல் நாகரிகம் தமிழகத்தில் தோன்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது.


தொல்காப்பிய வேந்தன்

தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில் மள்ளர்களால் நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர், பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின. நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான். தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்ககூடிய மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது. இந்நூலில் இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது.
வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும்
—– தொல்காப்பியம் – பொருளதிகாரம்
நெல் நாகரிகம் தோன்றிய மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனக் கூறுகிறது. தொல்காப்பிம் தோன்றியது கி.மு. 500 என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த நெல் நாகரிகம் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே தோன்றி இந்நிலைக்கு முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பின்பு நெல் நாகரிகத்தைதத் நமது பண்பாடாகக் கொண்ட மருத நில மள்ளர்களின் பண்பாட்டுத் தலைவர்கள் பலரும் வேந்தன்-வேந்தர் எனப்பட்டனர். இப்பண்பாட்டுத் தலைவர்களான தமிழக அரசர்கள் தமிழ் மூவேந்தர் சேர வேந்தன், சோழ வேந்தன், பாண்டிய வேந்தன் எனப்பட்டனர். மருத நில இறைவனான (அரசனான) வேந்தனின் வழித் தோன்றல்கள் தாம் மள்ளர் குல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள்.

No comments:

Post a Comment